என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 30 ஜூலை, 2012

உனது ஜீவனின் ஜீவன் நான் ..!

நியாங்களில் தூங்கும் 
உண்மையாய் 
உண்மையாய் என்னுள் இருந்தவள் ..!
உறவு தெரியாது உயிராய் வாழ்ந்தவள் ..!
மலரின் உதடுகள் காலை பனித்துளி 
சுமப்பதால் பூக்களுக்கு வலியில்லை ..!
என் கண்கள் சுமந்தது கண்ணீர் 
இதயம் சுமந்தது வலிகள் ..!
இருந்தும் புன்னகைத்தது என் உதடுகள்
உன் உன் அன்பின் அரவணைப்பு 
எனக்கு தாயாய் இருந்ததால் ..!


இருந்தும் வலியது கண்களில் 
இன்று உன் முகம் காணாது ..!
பிரிவு இது நிரந்தரம் ஆனால் 
என் உயிர் அது நிரந்தரம் ஆகும் 
கல்லறை தனில் ..!


விழிகள் அணைத்த உன் புன்னகை 
தொடருமா மீண்டும்..!
தெரு வோர மின் விளக்கு 
காத்திருக்கும் இரவுக்காய் 
தாங்கள் புன்னகைக்க ..!
என் விழியது தூங்காது 
துயரத்தில் உன் விழி காண ..!
கனவாய் அல்ல நியமாய் வா 
நான் நியமாய் வாழ 


தாஸ்

இதயம் .

துடிப்பது எனக்காய் .
இருப்பது உனக்காய் .
சுமப்பது உன்னை 
அது இறப்பதும் உனக்காய்!

புன்னகை

உன் புன்னகைக்கு 
புன்னகைக்கவும் 

கண்ணீருக்கு கைகள் தரவும் 
உனக்கு தாய் ..!


எனக்கு ..?


செவ்வாய், 24 ஜூலை, 2012

உன் கண்கள் மட்டுமே
இது வரை என்னுடன் பேசியது ..!
அதனால் தான் என் கண்கள்
கண்ணீரை சுமக்கிறது
உண்மை புரியாது .!

மட்டும் கவியாய்
.


என் மனதில்
வாழும் தேவதைக்காய் ...
மலரின் இதழால் ஒரு கவி ..'
முடிவில் அங்கெ அவள் பெயர் 
மட்டும் கவியாய்.

லண்டன் ...!


உலகத்தின் அழகில் 
அழகாய் நகரமாய் ...!
மனிதம் வளர மனசு உள்ள 
மனிதர்கள் பிறந்த மண் ...!
மாணவர் மாண்பு கொள்ள
அழகிய பல்கலை அதிலே அறிவுடன்
பேசும் நியங்கள் இங்கே ..!

யாரும் வாழ தன்னை தரும்
உலகில் இதுபோல் அழகுதான்
ஏது ...!

தாஸ்

நான் காத்திருந்த காலங்கள் 
உனக்காய் ....!
இப்போது எனக்காய் காத்திருக்கும் 
நேரங்கள் என்னில் முள்ளாய் ...!
இருந்தும் வருவேன் உன்னிடம் 
ஒரு நாள் ...!
விழி நீரை மறந்துடு ..!

By தாஸ்

சனி, 21 ஜூலை, 2012

நினைவுகள் ......!
தாலாட்டு சொல்லி என்னை
தூங்கவைத்த அன்னை அவள்
குரல் கேட்கும் காலமது எப்போ ...?
தோள் சுமந்து என்னை தாங்கிய
தந்தையவர் அரவணைப்பு எப்போ இனி ..?
தனிமையில் தனியாய் ஒருமையில் இங்கே !
வலியது பிரியுது மரணமும் மறுக்குது ..!

கூடி கோவில் திருவிழா கண்ட கூடி பிறந்தவர்
எங்கே ?
கை பிடித்து பள்ளிக்கு பக்குவமாய்
தெருவோரம் தெரியா கதை பல கூறி
புன்னகைகள் தந்த பாட்டி அவள் நினைவுகள்
இன்னும் ...!

மௌனம் கொண்டு விரதம் கண்டு
வட்டமிட்டு வாழை இல்லை போட்டு
சோருமிட்டு பருப்பும் போட்டு
அப்பாவின் வருகைக்காய் காத்திருந்த
சுகமான நாட்கள் இனி எப்போ ..?

தங்கைக்கு தாயான நாட்களும் ..
அக்காவுக்கு அண்ணனான பொழுதுகளும்
தம்பிக்கு தந்தையான நினைவுகளும்
கிடைக்காத வரமாக கழித்த நாட்களும்
வருமா என் வாழ்வில் ஏங்குகிறேன் ..!

நிலா முத்தத்தில் சித்தப்பாவும் சித்தியும்
நாங்களும் நாளும் தாயம் போட்டு
கண்ணீர்விட்ட , கைகள் தட்டிய
தணியாத ராகங்கள் இரவினில் இருளை
பகலாக்கிய சுகங்கள் இனி எப்போ..?

மைதானம் சேர்ந்து நண்பர்கள் கூடி
கைத்தாளம் போட்டு பாட்டு பல இசைத்த
நாட்களை மறப்பேனா ..?

பிரிவுகள் உன் படைப்பில் நிரந்தரம்
இறைவா .!
நினைவுகள் அதுபோல் என் வாழ்வில்
நிரந்தரம் ..!
இனி ஒரு பிறப்பு வேண்டாம் இதுபோல்
பிரிவுகள் தரும் வலிகளை சுமப்பதற்கு ..!

தாஸ்


வெள்ளி, 20 ஜூலை, 2012

நீ ஒருநாள் இல்லாது ....!!!நீ ஒருநாள் இல்லாது வாழாது
என் ஜீவன்.!
வாழ்ந்தாலும் தாங்காது
என் இதயம்..!
கனவோடு பிறந்தாலும்
நினைவாக நீ என்னுடன் ..!

பூக்களின் முகவரி தேடி
தேனிக்கள் வருவதா..?
நிலவின் முகவரி கண்டு
மேகங்கள் செல்வதா..?
அன்பே ..! உன் முகவரி வேண்டாம்
நினைவுகள் போதும் ..!
நியமான நட்போடு நிழலாகி வாழ ..!

கடலோர கார்ற்றில் உன் குரல்கள்
கவியாக ...!
கம்பனின் கவியியும் உன் குரல் சாரும்
உன் முகவரி மறைத்து என் முகம்
மறைப்பது நியாயமா ..?

By தாஸ்

வியாழன், 19 ஜூலை, 2012

உன் கண்களின் மொழிகள்

என்னில் நிழலாகி 
உயிராகி என்னை நேசித்தாய் ..!
என்னில் மாற்றம் உன்னால் ....
அது என் காதாலின் வாசம் தன்னில்!
பாசம் என்னும் நேசம் கொண்டு 
மனைவி என்னும்
விழியாவாய் என்னில் ...!


உன்னை காதலித்த பின் தான்
புரிந்தது ...!
உன் கண்களின் மொழிகள் .
உதடுகளின் கவிகள் ..!
விதி என்னை வாழவைக்கும் வரை 
விலகாது என் ஜீவன் உன்னை விட்டு .
விதி வந்து மடிந்தாலும் 
புது விதி நான் வரைவேன் உனக்காய் 
கடவுளாய் அன்பே ..!
தாஸ் Romance 4 lovers hug jpg

தாலாட்டு ....கருவில் சுமந்தவள் 
இருவிழி தூக்கம் மறந்து 
இருவிழி தூங்க ....
அவள் உதடுகள் தென்றலில்
வரையும் கவிதை ...!

By தாஸ்
 பிறப்பு என்னும் அத்தியாயத்தில் 
பல பக்கங்களை கொண்ட எம் வாழ்வுதனை 
நேரம் கிடைக்கும் போது புரட்டி பார்த்தால் 
கண்ணீருடன் எம்
முகங்கள் பேசிய நாட்களும் 
எம் இதயத்துக்கு இன்னொரு இதயம் 
ஆறுதல் சொன்ன நாட்களும்
வலிகளும் தான் அதிகம் ...
அதனால் தான் நம் வாழ்கையின் 
அத்தியாயங்களை மறக்க முயற்சிக்கிறோம் ...'

தாஸ்

sad families

புதன், 18 ஜூலை, 2012

அன்பே ......

அன்பே ......
பிரிவின் வலிகள் !
எத்தனை கொடுமைகள் 
என்பதை ........
உனது விழி துளிகளை 
சேர்த்து பார் ...!
பின்பு சேர்ந்து வா என்னுடன் ..!

தாஸ்வலி

ஆயிரம் வலிகளை 
எனக்காய் சுமந்தவள் 
உன்னை 
விழிகளில் காப்பேன் 
என் விழிகள் மௌனிக்கும் வரை ..!

தாஸ்அத்தியாயங்கள்.... !

என்னுள் கருவாகி ..
காதலியான -என்னுயிர் 
உன் புன்னகைகள் என்றும் 
என் ஆயுளின் அத்தியாயங்கள் !

தாஸ்
தாஜ்மஹால் ...!!!

என்னவள் எனக்காய் 
முதலாய் வரைந்த ...
முதல் கடிதத்தின் ...
முதல் வார்த்தைகள்
தாஜ்மகாலாய் ...
என்னுள் என்னுயிரில் இன்றும் ..!தாஸ்தாயன்பு .....!


புயலிலும் கொட்டும் மழையிலும்
திசைமாறி பறந்தாலும் ..
வகையாக இரை தேடி
வழி தேடி தன்குஞ்சுக்கு
பசிதீர்க்கும் தாய் பறவை
அன்புக்கு நிகர் ஏது
இவ்வுலகில் ...!?

தாஸ்

வெள்ளி, 6 ஜூலை, 2012

விழிகளில் எம்மை சுமந்தவர்தனை இன்று தெருவோரத்தில் கையேந்த விடலாமா....???

நமது மண்ணில் ... தெருவோரம் 
அழகுதருவது 
எது தெரியுமா ...!
அன்பு என்னும் ஒரு வட்ட வாழ்வில் குடும்பம் என்னும் கோவில் கட்டி மழலை சுமந்து 
காத்த எம் தேசத்தின் பெற்றோர் என்னும் அகராதிகளே ...!
உன் பிள்ளை உன்னை தெரிவில் விட்டாலும்
என் பிள்ளை உனக்கு தருவான் தண்ணீர் அது உன் உயிர் காக்கும் ...! இது ஒரு பெற்றோரின்
புலம்பல் அல்ல மனித நேயம் ....!

மண்ணில் நீ வாழ்கிறாய் உன் வாழ்கையில்
உன் பெற்றோரும் வாழ்கின்றனர் ...
வறுமை துன்பம் துயரம் எதுவாக நீ சுமந்தாலும்
உன் விழிகளாய் நேசி உன் பெற்றோரை ...

மானிடம் வாழ சிலுவை சுமந்த கர்த்தரை
பார் ...பாரினில் அவர் கடவுள்
உன்னை சுமந்து வளர்த்த உன் பெற்றோருக்காய்
சுமக்க சிலுவையை தயங்காதே ....
அப்படி நீ சுமந்தால் மானிடா
நீ இருப்பாய் கடவுளுக்கே கடவுளாய் ...'

கருணை அன்பு பாசம் நேசம்
இது எல்லாம் வார்த்தைகளின் அர்த்தங்கள் அல்ல.... அவை எம் தாய் , தந்தை என்னும்
வடிவங்களின் அர்த்தங்களை சுமக்கும்
மொழியின் கரு ...!

உன்னை ஆயிரம் உறவுகள் நண்பர்கள்
நேசித்தாலும் .........நேசிக்காவிடாலும் ....
தனிமையில் ஒரு நாள் ஒரு துளி கண்ணீர்
உன் விழிகளில் இருந்து .....
அப்போ பாரு ....
அணைக்க இரு கரம் தாயாய் ...
ஆறுதலுக்கு இரு கரம் தந்தாய் ...'

உன் பெற்றோர் என்னும் உறவுக்கு
அர்த்தம் அழகாய் கூற உன்னை விட அகராதியால் கூட முடியாது ...!

சில வேளை நாம் சிந்திக்க தவறுகிறோம்
தவறுவதால் மிருகங்களாய் இருக்குறோம் ...!
என் வீட்டு மின்சாரம் எனக்கு வெளிச்சம்
தரும் ...
ஆனால் என் வாழ்வில்
வெளிச்சம் தந்த உறவுகள் இரண்டும் (உணர்வுகள் ) தெருவோர வெளிச்சத்தில் ...

தாஸ்


நட்பு

என் முகவரி வந்து ...
உறவு கொண்டு நட்பு என்னும் 
சோலையில் சங்கமமானது 
எம்முயிர்கள் ...!
பொய்யாக கூட போக 
முடியவில்லை உன்னைவிட்டு ...!
மெய்யாக ....??

By தாஸ்வியாழன், 5 ஜூலை, 2012

காதலித்து பார் .......!!!வானம் தொட்டு -பூமி வரை
அவள் புன்னகைகள் விம்பங்களாய்
கானம் இசைக்கும் குயிலின்
குரலாய் அவள் குரல் ...!

மழையும் குளிரும் ஒன்றாய் ...
முன்னே வந்தால் அவள்
பின்னே போகும் உன்
இதயத்தின் துடிப்பு ..!

அவள் கண்கள் உன்னை நோக்கும்
துடிக்கும் இதயம் இடைவெளி தரும்
தரும் இடைவெளியில் அவளின் இதயம்
உனக்காய் துடிப்பதாய் உணர்வாய் ..!

கோவில் வீதியில் தேர் வலம் வரும் ..
அதனை அவள் வலம் வர ...
உன்னுள் அவள் தேவதையாய் ....
ஏன் நினைவுகளாகவும் அவளே ..!

உன் விரல்கள் விரல்களி
ல்  கவி வரையும் 
ஓவியம் ஓன்று கால்களினால் தரையிலே ...
அவள் பார்க்கும் ஓரக்கண் பார்வை உன்னில்
உன்னில் உனக்குள் தெரிந்தால்...!

தனிமையில் பேசுவாய் தென்றலில் அது கவியாய் ...!
வெற்று தாள்களில் வெற்றிடம் பஞ்சமாகும் ..
பஞ்சு மெத்தை தூக்கம் மறப்பாய் ..!
மறப்பாய் உன்னையே- நினைப்பாய்
அவள் கண்களின் மொழியையே ...!

சற்று திரும்பும் வினாடிகளில் அவள்
வதனம் தேடுவாய் ....
இல்லாவிடாலும் இருப்பதாய் உணர்வாய்...
உணர்விலே கலந்தவள் உணர்வாகவே
இருப்பாள் உன்னில்....!

By தாஸ்  

திங்கள், 2 ஜூலை, 2012

இங்கிலாந்தில் மாணவர் விசாவில் தங்கி இருப்போரின் நிலை

பிறந்த மண்ணில் 
வியர்வை சிந்திய என் தந்தை
பணத்தில் ....!
சொந்த மண் பல்கலை பட்டம்
இருந்தும் ..... பயணம் தொடர்ந்தது 
படிப்பும் பணமும் அணைக்க ...!

முதல் முதல் பயணம் வானில்
பறக்கும் மனிதனாய் ...!
கால்கள் பதித்தது லண்டன் மண்ணில்
மனமும் மகிழ்ந்தது ......
அணைக்க உறவு இல்லை 
இருக்கும் பணத்தில் பசியை போக்கும் 
இல்லா மனிதன் உண்ணும் நாளாய் ..!
பல நாள் அலைச்சல் சிலகாசு வேலை 
அரைவாசி பயணத்திற்காய் கரைய ...
முழுமையும் இல்லாமல் போகும் 
இருக்கும் வாடகை வீடடுக்காய் ...!

சட்டங்கள் புதிது 
எங்கள் கனவுகள் கரைந்தது ...!
இருந்ந்தும் தெரியாது அம்மாவுக்கு ..
என் படிப்பு பாழாய் போனது ....!

வேலை இழந்தோம் ...
படிப்பை மறந்தோம் ....இருந்தும் இரை
தேடும் பறவையாய் தினம் தினம் அலைகின்றோம் 
பணத்துக்காய் வேலை தேடி ...!

கருவினில் சுமந்தவள் புன்னகை 
நிலைப்பதுக்காய் ...
களவாய்   உழைத்த பணத்தை 
அணைத்தது என் தாயவள் கைகள் ..!

கிடைத்த பணத்தில்
சாமிக்கு சங்காபிசேகம் ..! 
ஊருக்கு அன்னதானம் .
என் வலிகள் அறியா அவள் இதயம் .
புரியாத புதிராய் எனக்குள் ..!

விதியின் விளையாட்டு 
என் கைகள் சுமந்தது விலங்கு ...!
பிறந்த மண்ணும் அழைக்க வில்லை 
பெத்தவள் உதடும் அழைக்கவில்லை ..
இருந்தும் திரும்பினான் நாடு ...

இவன் விழிகள் சிந்திய கண்ணீர் துளிகள் 
நேரம் இருந்தால் ...
சேர்த்து பாருங்கள் ...
உலகில் உயிரே அறியாத வலிகளை 

அவன் கண்ணீர் துளிகள் சுமந்து இருக்கும் ..!

உழைத்த பணத்தில் சாமியும் 
மகிழ்ந்தது ...!
ஊரும் உண்டது ..
அவன் நினைவுகள் இழந்து 
தனிமையில் அங்கே  

இவனின் இந்த பயணம்
கல்லறை நோக்கியே ....


எழுதியவர் :-தாஸ் 

நம்பிக்கைஇதுவரை நீ
காதலிக்கவில்லை
என்னை ...!
இருந்தும்
மரணிக்கிறேன் நான்
நீ காதலிப்பாய் என்
கல்லறையை ..
என்னும் நம்பிக்கையில் ..!

By தாஸ்
அன்பே ...

அன்பே ...
உன் கோபத்தில் நான்
புன்னகைப்பது ஏன்
தெரியுமா ..?
கோபத்தின் பின் தான் ..
நீ என்னை நேசித்த நாட்கள்
அதிகம் என்பதால் ..!

By தாஸ்