என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 28 ஜூன், 2012

தாய்மொழி

கருவில் சுமந்தவள் 
உதடுகள் உரைத்தது தமிழ் மொழி ..!
யனனம் எடுத்த கணமே 
என் உதடுகள் சொன்னது 'அம்மா ' 
கடவுளின் மொழியில் 
என் மொழி '
அதுவே எனது தாய்மொழி
இதுவே என் வழி..

By தாஸ்
தங்கை

சந்தோச சாரலில் ...
சிறுதுளி மழைத்தூறலாய் ...
புன்னகை சிறகினை தாங்கினோம்
நாளும் ...!
தடைகள் இன்றி வானில்
சிறகுகள் விரித்தோம் ..!

பிறந்தவள் நீ அல்ல ..'
பிரமன் தந்தவள் நீயானாய் .
விழிகள் தாங்கும் கருவில்
உன்னை சுமக்கும் அண்ணன்
நானாய் ...!
உன் விழிகள் கலங்கும் நாட்கள்
இல்லை உலகில் ...
தூரத்து உன் அழைப்பு ..
சுகமான கீதமாய் தென்றலில் ..'
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
தங்கை என்னும்
உறவே வார்த்தைகளாக இருக்கும் .!

By தாஸ்

செவ்வாய், 26 ஜூன், 2012

நட்பு ..!


கடவுளின் படைப்பில்
புனித உறவு ..!
கல்லறை வரை தொடரும்
நினைவு.!
உண்மை நட்பு சாகாது ..!
சாகும் வரையில் .. அதன்
நினைவுகள் தூங்காது ..!

தாஸ்

வெள்ளி, 22 ஜூன், 2012

நினைவு


உன் பிரிவால்


என்னுயிரை பிரிய ஆசை கொண்டேன் ..


இருந்தும் வாழ்கிறேன் ...!


உன் நினைவுகளும் என்னுடன் 


அழிந்துவிடும் என்னும் ஏக்கத்தில் ..!
By தாஸ் .என்னவளே ..!என்னவளே ..!
நீ இல்லாத நினைவுகள்
இல்லை ....!
இருந்தால் நினைவுகள்
இல்லாத மரணத்தில் நான்!!

By தாஸ்வியாழன், 21 ஜூன், 2012

உண்மையாக நேசி .!
நியமாகவே நீ....
செத்துக்கொண்டு இருப்பாய்...
சின்ன சின்ன பிரிவுகளிலும் ..!
ஆனாலும் சுகமானது..!

By தாஸ்

புதன், 20 ஜூன், 2012

அம்மாகருவில் சுமந்தவள் 
தோளில் தூங்கும் போது ...
கருவறை சாமி கூட
என் கண்களில் தோன்றாது ...! 


By தாஸ்திங்கள், 18 ஜூன், 2012

வலி

காதலின் தவிப்பை
உணர்கிறேன் உன்னால் 
முதல் முதல்....!
தனிமையில் பேசவைத்து ....
சுகங்களை ....
தந்தாய்....!
இருந்தும் நீ
பேசாத போது
இன்னும் வலிக்கிறது ....

BY :தாஸ்

பனித்துளிகள் சுமந்த 
பகலவன் ஒளியாய் ....
வலிகளை சுமந்த என்னில் ....
உன் விழிகளால் 
மொழிதனை பேசி ... 
வாழ்க்கை தந்தவள் நீ ..!

By தாஸ்


ஞாயிறு, 17 ஜூன், 2012

துடிக்கும் இதயமும் உனக்கானது 
விழிக்கும் விழிகளும் உனக்கானது
நினைவுகள் எல்லாமே 
நீயாக இருந்தாலும் 
நானும் நீயானது நியாமானதே ..
இருந்தும் நீ பிரிய நினைத்ததை
உன் மௌனம் எனக்கு
புரிய வைத்தது ......!

இது தொடர்ந்தால்
தொடராது என் இதயத்தின் துடிப்பு ...
விழிகாது என் விழிகளும்.....
எனக்காக இல்லாது போனாலும்
உன்னை நேசித்த
உன்னையே சுமந்த
பாவமான என் இதயத்துக்காக
ஒரே ஒரு தடவை
வந்து விடுவாயா .....!

By தாஸ்

நட்புநட்பின் உறவு
மானிடம் மட்டும் அல்ல .....
மனங்களால் இணைந்த
எல்லாமே .....By :தாஸ் .
கரைகள் தேடும் அலைகளாய் 
இடைவிடாத பயணமே 
நட்பு .......!உன்னை நேசித்தேன்
என் கண்கள்
தூக்கத்தை நேசிக்கவில்லை
ஏன் ...?
கண்ணீரில் கண்கள் கவி
வரையும்
வெற்று தாளாய் என்
தலையணை ..!

By: தாஸ் அப்பா .....


அப்பா .....
உலக பந்தத்தில்
நிதர்சன உறவில் ..
நியமானது நிரந்தரமானது
கடவுளை போல ......!
By தாஸ்திங்கள், 11 ஜூன், 2012உனது குரல்
ஒலித்திடும் போது
எனது உதடுகள் என் அனுமதி
இல்லாமலேயே
ஏதாச்சும் பேசிடும்
மன்னிச்சுக்கோ

திங்கள், 4 ஜூன், 2012

காத்து இருந்து ..


கருவிழியில் நிறைந்து ...

கருவாகி உயிர் வாழும் 


தேவதை என் இதயத்தில் ..!

சருகாகி போனால் 


இந்த உறவு....!


சுகமான உயிர் கூட


வாழ நினைக்காது 


உலகில் ...!

By தாஸ்

வெள்ளி, 1 ஜூன், 2012

நீ சொன்ன
அந்த சில வார்த்தைகள்
போதும் ...
உயிர் உள்ளவரை என் இதயம்
சுமப்பதுக்கு உன்னை ...
வாழனும் உனக்காக ...
இல்லைனா சாகனும்
உனக்காக ...
ரெண்டும் சுகமே ... உனக்காக
என்பதால் ....

தாஸ்
துடிக்கும் இதயமும் உனக்கானது


விழிக்கும் விழிகளும் உனக்கானது

நினைவுகள் எல்லாமே


நீயாக இருந்தாலும்


நானும் நீயானது நியாமானதே ..
இருந்தும் நீ பிரிய நினைத்ததை


உன் மௌனம் எனக்கு


புரிய வைத்தது ......!

இது தொடர்ந்தால்


தொடராது என் இதயத்தின் துடிப்பு ...


விழிகாது என் விழிகளும்.....


எனக்காக இல்லாது போனாலும்


உன்னை நேசித்த


உன்னையே சுமந்த


பாவமான என் இதயத்துக்காக
ஒரே ஒரு தடவை


வந்து விடுவாயா .....!
By தாஸ்


வரங்களால் கிடைத்தவள்
அல்ல
நீ எனக்கு ......வரம் ஒன்னு கேட்கிறேன்
உயிரில் உறவான நீ
என்னை விட்டு பிரியக்கூடாது
என்பதற்காய் ....

By தாஸ்

வறுமை ...

வறுமை வறுமை ...
இதுவே உலகின் கொடுமை ...
கருவினில் இருந்தே ....
கடவுள் தந்த பரிசா எமக்கு ....
எத்தனை கனவுகள் பொய்யாக்கின ...
கஞ்சியே எங்கள் வீட்டின்
அடையாளம் .....
படிப்பதுக்கு நிலவு விளக்காக ....
புத்தகம் இன்றி
வெற்று காகிதங்கள்
கைகள் தந்தன ....
நரம்புகள் நாராய் தேய்ந்தாலும்
மனம் தளராத தந்தையின்
உழைப்பு மதியம் மட்டுமே ....
வயிற்றை நிரப்பியது...
கடவுள் இருந்தால் ....?
கண்கள் உண்டா அவருக்கு..
எங்களை காக்க அவரின் கரங்களும்
மறுக்குறதா ..... ?
நானும் சிறக்க ....
சிரிக்க ஆசை கொள்கிறேன்
முடியுமா..?
குறைகள் இன்றி பிறந்தாலும்
கருவே என்னை
கண்ணீருடன் தான் சுமந்ததா ..?
எங்கள் மரணத்தில் பூக்கள்
தூபுவர்களே ....
எங்கள் வாழ்வில் எங்களின் ...
கண்ணீரை துடைக்க வாருங்கள் ...!
நானும் நாளை ஒரு அப்துல் கலாம் ...
..அன்புடன் .....???????

எத்தனை நினைவுகள் ....!!!

எத்தனை நினைவுகள் ....
உணர்வுகள் எங்களின் வாழ்வினில் ....
பிரிவே உணராத உறவுகள் ...
நண்பர்கள் ... ! நாளை என்பதே மறந்து
நண்பர்கள் நாங்கள் சிட்டுக்களாய்
பறந்த அந்த உலகம் எங்கே ...?
காலை கதிரவன் வருவதற்கு முன்பே
தங்கள் மொழிகளில் இனிமையாய் ..
பேசி செல்லும் குருவிகளே
உங்களின் குரல் கேட்க தவிக்கின்றேன்
வருவீர்களா ...?
இனிதான இறைவன் பெயர்
சொல்லும் என் ஊரு கோவில் மணியே
இன்றும் ஒலிக்கிறாயா
...உன் குரல் கேட்க ஆசை .. ஆசை..?
பரிட்சைகாய் எழுதவும்
என்னவள் முகம் பார்க்கவும்
மட்டுமே உன்னிடம் வந்தேன்
மன்னிப்பாயா என்னை....?
வெள்ளிக்கிழமை நண்பர்கள் நாம்
உன் மடியில் உங்கார்ந்து உன்னையே
பேசினோமே எங்களை நினைவிருக்குரதஆ ..
ஆனாலும் ஓரமாய் நின்று
உன் பொங்கல் சாபிட்டோமே ...
எத்தனை பசுமையான நாட்கள் உன்னிடம்
இறைவா...
சிறகுகள் இல்லாமலே
மாலை நேரம் எங்களின் வீடாய்
வந்த எங்கள் மைதானமே உன்னை மறப்போமா
உசிர் உள்ளவரை ....
சின்ன சின்ன சண்டைகள் ...
சின்ன சின்ன கோபங்கள் ...

வானத்து நட்சத்திரமாய்
சுதந்திர நாயகர்களாய் வலம் வந்த என்
நண்பர்களே இன்றும்
உங்களின்.....
செல்ல சின்ன கோபங்கள் எங்கே ?
வாருங்கள் மீண்டும் புதிய பிறப்பு எடுப்போம் ...
காதல் ...
இது தானே எண்களின் மகிழ்ச்சி
உன்னவளை தேடி போன நாட்களின்
ஜாபகங்கள் இன்னும் என்னிடம் ..
அவளை காண எத்தனை தவிப்பு ...
தண்ணீர் குடத்துடன்
மெல்ல நடந்து
அவள் கண்கள் மட்டுமே பேசியதை
இன்னும் நினைவிருக்குறதா..
கோவில் தேரில் என்னவள் மட்டுமே
சாமியாய் ஆனாவே....
அதுவும் நினைவில் ....
அவளுக்காய் வாழ்ந்து
அவளும் இல்லை
நீங்களும் இல்லை ... என்னோடு ..
கனவுகள் மட்டுமே
உங்களை என்னிடம் தருகிறான
இப்போ எனது நண்பன் கனவுகள்
மட்டுமே......
நண்பர்களே மீண்டும் சொல்கிறான்
உங்கள் நண்பன்
எண்களின் கல்லறைகள் எண்டாலும்
தூரம் இன்றி அமையட்டும்
தூர பார்வையாய் ....

நிலவுமகள் விலகி செல்ல ...


கதிரவனின் வருகையும் ....


மெல்லிய தென்றலை சுமக்கும் 


காலை பொழுதில் ...குயிலோடு .... குருவியும் 

சிறகுகள் விரிக்கும் நேரமதில் .....

என் கனவுகள் கலைந்து.....


கண்கள் விழிக்க வைக்கும் 


என் கோவில் மணியோசையும் ....


கடவுளின் கருணையும் .....


இன்றும் என்னுள் ...


  •     by:தாஸ்

வீசும் தென்றலில் 


முத்தத்து ரோயாக்களின் 


முத்தங்கள் ..... 


என்னவள் உதட்டின் 


புன்னகையாய் 


எனக்குள்
  • By தாஸ்